ஈரோடு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

DIN

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம், கோபி மண்டல போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலாளர், தாளாளர் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதன்மைக் கல்வி அதிகாரி ஜெகதாலட்சுமணன் முன்னிலை வகித்தார். 
கோபிசெட்டிபாளையம் மண்டலப் போக்குவரத்து அலுவலர் வி.பழனிவேலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகள், சாலைகளில் நிகழும் விபத்துகளை முன்னெச்சரிக்கையோடு எவ்வாறு தடுக்கலாம் என்பதை குறும்படங்களின் வழியாகத் திரையிட்டு காட்டினார்.
விழாவில், கல்லூரித் துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, பேராசிரியர்கள், மாணவிகள், கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT