ஈரோடு

புகார் அளிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு: மகளிர் ஆணையத் தலைவர் உறுதி

DIN

பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
சத்தியமங்கலம் மலைப் பகுதியில் உள்ள கடம்பூர், குன்றி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், பெண்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், பெண் குழந்தை வளர்ப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு போன்றவை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தலமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் பெண் நெசவுத் தொழிலாளர்களை சந்தித்து நெசவுத் தொழிலில் சந்திக்கும் பிரச்னைகள், அரசு நலத்திட்ட உதவிகள் முறையாக சேருகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். சரியான கூலி கிடைப்பதில்லை என்று பெரும்பாலான பெண்கள் கூறினர். இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற கோரிக்கைகளை மனுவாக அவரிடம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கண்ணகி பாக்கியநாதன் கூறியதாவது:  பெண்களுக்கு எதிரான புகார் எதுவும் பெறப்படவில்லை. வன்கொடுமை போன்ற சமூகப்  பிரச்னைகளைப் பெண்கள் வெளியே கொண்டுவருகின்றனர். இது போன்ற பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் புகார் மனுக்களைப் பெற மறுக்கும் மகளிர் காவல் நிலையங்கள் மீது காவல் துறை உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுப்படும். கொத்தடிமைகளாக வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து மாற்றுத் தொழில் செய்ய அறிவுறுத்தியுள்ளோம் என்றார். ரீடு தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT