ஈரோடு

குமுதா பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு

DIN


தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாராட்டினார்.
 இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக நடைபெற்ற 64 வது தேசிய அளவிலான கையுந்து பந்து மற்றும் கடற்கரை கையுந்து பந்து போட்டி, 45 வது தேசிய அளவில் இளையோருக்கான கையுந்து போட்டி, மாநில அளவிலான பாரதியார் தின கடற்கரை கையுந்து போட்டி, தடகளப் போட்டிகளில் பங்கேற்ற நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் வு.வர்ஷா, ஸ்வேதா, ஸ்வாதி, சம்யுக்தாஸ்ரீ, சு.ஹரிதா மாணவர்கள் பு.மெய்க்கவியரசு, ஏ.ஆதித்யா ஆகியோர் தேசிய மற்றும் மாநில அளவில் 7 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.   போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா, நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் தம்பிசுப்பிரமணியம், பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியை வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT