ஈரோடு

புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி

DIN

ஈரோடு புனித செபஸ்தியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை தேர்பவனி நடைபெற்றது.
ஈரோடு நடுவீதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி  மாதா ஜெபக்குழுவினரின்  சிறப்பு ஜெபக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் பெருவிழா திருப்பலியை ஈரோடு அமல அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை ஜான்சேவியர் பங்கேற்று நடத்தினார். தொடர்ந்து, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பரத்தில் புனித செபஸ்தியாரின் 
சொரூபத்துடன்ஆலயத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது. 
மறைமலைஅடிகளார் வீதி, புது வீதி, நடு வீதி வழியாக தேர்பவனி சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT