ஈரோடு

மாநகராட்சிப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள்: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

மத்திய அரசின் பொலிவுறு நகர்த் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பொலிவுறு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
 மத்திய அரசின் பொலிவுறு நகர் திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள்  மேற்கொள்ள மத்திய அரசு ரூ.990 கோடி நிதி ஒதுக்க உள்ளது. முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளில் பொலிவுறு நகர்த் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொலிவுறு வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வகுப்பறைகளில் தரையில், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. 
 மேலும் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கணினி, டிஜிட்டல் திரை போன்றவையும் அமைக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பொலிவுறு வகுப்பறை தயார் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
 ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 61 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளின் வகுப்பறைகள் பொலிவுறு வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பறை, நடுநிலைப் பள்ளிகளில் 2 வகுப்பறைகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 3 வகுப்பறைகளும் பொலிவுறு வகுப்பறைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
 தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் 27 பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்பின் 200 மாணவ, மாணவிகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பள்ளிகளிலும் பொலிவுறு வகுப்பறைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT