ஈரோடு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்

மொடக்குறிச்சி தாலுகா அறச்சலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின் கம்பியில் உரசி தீப் பிடித்து எரிந்து சாம்பலானது.

DIN

மொடக்குறிச்சி தாலுகா அறச்சலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின் கம்பியில் உரசி தீப் பிடித்து எரிந்து சாம்பலானது.
தருமபுரி மாவட்டம், முடுக்கம்பட்டியைச்  சேர்ந்தவர் வைக்கோல் வியாபாரி சிவலிங்கம். இவர், அறச்சலூர் பகுதியில் வைக்கோல்களை விலைக்கு வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு வெள்ளகவுண்டன்வலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் வந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பியில் வைக்கோல் வாகனம் உரசி தீப்பிடித்தது. 
இதைப் பார்த்த விவசாயிகள் சத்தம்போட்டு, வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைக்க முயன்றனர்  .
தீ கட்டுக்குள் வராததால் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.  தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வைக்கோல் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து அறச்சலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT