ஈரோடு

மாவட்டத்தில் தேர்தல் பணியில் 10,675 பேர்: மார்ச் 24 இல் முதல்கட்டப் பயிற்சி துவக்கம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 10,675 பேருக்கு வரும் 24ஆம் தேதி முதல் கட்டப் பயிற்சி துவங்குகிறது. 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10,675 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த முதல்கட்ட பயிற்சி வருகிற 24ஆம் தேதி துவங்குகிறது.  சட்டப் பேரவை தொகுதி வாரியாக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மேற்குத் தொகுதிக்கான பயிற்சி முகாம் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி,  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோபி  பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, பவானிசாகர் தொகுதிக்கு சத்தியமங்கலம் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி என அந்தந்த தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. 
ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதிகளும், பவானி, அந்தியூர், கோபி, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிகள் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.  பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதியிலும் உள்ளன. 
இந்தப் பயிற்சியில், வாக்காளர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பது, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரி பார்ப்பது,  வாக்குச் சாவடிக்குள் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை தயார் செய்தல், கையில் மை இடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், பதிவுகளை எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் அவரவர் பணி செய்யும் சட்டப் பேரவை தொகுதி தெரிவிக்கப்பட்டு, அதற்குரிய இடத்தில் இரண்டாம் கட்ட பயிற்சி நடக்கும்.
அதற்கடுத்த ஒரு வாரத்தில் மூன்றாம் கட்டப் பயிற்சி நடத்தப்படும்.  அப்பயிற்சி நிறைவில், பணி செய்யும் பூத் விவரம், எப்போது செல்ல வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும் அவர்களுக்கான அஞ்சல் வாக்கு விவரமும் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT