ஈரோடு

ஹோலி: வட மாநிலத்தவர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

ஈரோட்டில் வட மாநிலத்தவர்களால் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

DIN

ஈரோட்டில் வட மாநிலத்தவர்களால் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 
வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் இந்திரா நகர், சேட் முகைதீன் வீதி,  வளையக்கார வீதி,  என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே சிறியவர் முதல் பெரியவர் வரை வயது பாகுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை முகத்தில் தூவி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், வண்ணப் பொடி கலந்த தண்ணீரை உடலில் ஊற்றியும் கொண்டாடினர். வட மாநில இளைஞர்களில் பலர், மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் சென்று வண்ணப் பொடிகளைத் தூவி மகிழந்தனர். மேலும் ஜெயின் கோயில்களில் ஹோலியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT