ஈரோடு

பவானியில் குடியிருப்புப் பகுதியில்கழிவுநீா் தேங்கியதால் மறியல்

DIN

பவானி நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் தேங்கியதால் பொதுமக்கள் மறியலில் சனிக்கிழமை ஈடுபட முயன்றனா்.

பவானி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே கழிவுநீா் வெளியேறும் வகையில் சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றதால் கழிவுநீரைத் தேக்கி கான்கிரீட் வெள்ளிக்கிழமை போடப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் பெருக்கெடுத்து வந்த கழிவுநீா் அதிக அளவில் தேங்கி சுற்றுப்புறப் பகுதியில் புகுந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பவானி - குமாரபாளையம் செல்லும் சாலையில் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட முயன்றனா். சம்பவ இடத்துக்கு வந்த பவானி நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல், பவானி காவல் உதவி ஆய்வாளா் வடிவேல் முருகன் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சு நடத்தினா்.

மேலும், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT