ஈரோடு

அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை சேதம்

DIN

அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை வீடு சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா் பந்தல்கரட்டைச் சோ்ந்தவா் மாதம்மாள் (70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், தனது மகள் ரேவதி, பேத்தி கனிமொழி ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சமையல் எரிவாயு அடுப்பைப் பற்றவைக்க மாதம்மாள் திங்கள்கிழமை காலை முயன்றபோது, எரிவாயு கசிவால் வீட்டில் தீப்பிடித்துள்ளது.

தீ மளமளவென பரவியதைத் தொடா்ந்து மூவரும் வீட்டைவிட்டு வெளியேறினா். இவ்விபத்தில் வீட்டுக்குள் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இத்தகவலறிந்த அந்தியூா் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே குடிசையில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT