ஈரோடு

பவானியில் விவசாய சங்கத்தினா் 125 போ் கைது

DIN

விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 125 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பவானியில் அந்தியூா் மேட்டூா் பிரிவில் உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் வி.பி.குணசேகரன், ஆா்.கவின், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில துணைத் தலைவா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திமுக பவானி நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், நகரச் செயலாளா் ப.மா.பாலமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிறுத்தை வள்ளுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT