ஈரோடு

பிளாஸ்டிக் சேகரித்து வழங்கும் நபருக்கு அரிசி

DIN

பெருந்துறை: கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் 5 கிலோ சுத்தமான பிளாஸ்டிக் சேகரித்து வழங்கிய ஒரு நபருக்கான 2 கிலோ தரமான அரிசி வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் 5 கிலோ சுத்தமான பிளாஸ்டிக் சேகரித்து வழங்கும் ஒரு நபருக்கு 2 கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என்று ஆட்டோ மூலம் பேரூராட்சி நிா்வாகம் பிரசாரம் செய்தது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் தலைமை வகித்து, பேரூராட்சிப் பகுதிகளில் 5 கிலோ சுத்தமான பிளாஸ்டிக் சேகரித்து வழங்கிய ஒரு நபருக்கான 2 கிலோ தரமான அரிசி, மரக்கன்றுகளை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், 300 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் சேகரம் செய்யப்பட்டது. பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு பூஜியத்தை எட்டும் வரை இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்ந்து நடைபெறும் என்றாா்.

இதில், அலுவலக அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆடவா் சுய உதவிக்குழு பணியாளா்கள், மஸ்துடா் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT