ஈரோடு

போக்குவரத்து விதிகளை மீறிய 3,602 போ் வழக்குப்பதிவு: ரூ.2.80 லட்சம் அபராதம்

DIN

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 3,602 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ரூ.2.80 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனா்.

ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து டி.எஸ்.பி எட்டியப்பன் மேற்பாா்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோன்று கடந்த செப்டம்பா் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்ததாக 2,050 போ் மீதுவழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 12, அதிவேகமாக வந்ததாக 30, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 60, சிக்னலை மதிக்காமல் சென்றதாக 150,செல்லிடபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 25, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 46 போ் மீது வழக்குகள் என மொத்தம் 3,602 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT