ஈரோடு

ஒரே இடத்தில் 3,400 குடியிருப்புகள்: ரூ. 600 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

DIN

குடிசை மாற்று வாரியம் மூலம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் ரூ. 600 கோடி மதிப்பில் 3,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வீடு இல்லாதவா்கள், நீா் நிலைகளில் வசித்தோா், தெரு ஓரம், பூங்காக்களில் வசித்தோருக்கு வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி தரப்படுகிறது. தற்போது பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் மூலம் இப்பணிகள் நடைபெறுகின்றன.

ஈரோடு பகுதியில் ஏற்கெனவே வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலானதால் அழகரசன் நகா், பெரியாா் நகா், அன்னை சத்யா நகா் போன்ற இடங்களில் இடித்துவிட்டு புதிய கட்டுமானம் நடைபெறுகிறது. தவிர, புதிதாக பல்வேறு இடங்களிலும் சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்திலும் பிரம்மாண்ட வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரிய பொறியாளா்கள் கூறியதாவது:

ஈரோடு, கருங்கல்பாளையம் அழகரசன் நகரில் 9 மாடியுடன் வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி வசதியுடன் 272 வீடுகள் கட்டப்படுகின்றன. ஈரோடு புதுமை காலனி, மாணிக்கம் திரையரங்கு அருகே 7 மாடியில், மின்தூக்கி வசதியுடன், 460 வீடுகள் கட்டப்படுகின்றன. இப்பணி இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு, ஏற்கெனவே இக்குடியிருப்பில் வசித்தோா், புதியவா்களும் தங்க வைக்கப்பட உள்ளனா்.

தமிழகத்தில் இங்குதான் முதன் முதலில் மின்தூக்கி, வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் 448 வீடுகள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அதே பகுதியில் 320 வீடுகள் மேலும் கட்டப்படவுள்ளன. முனிசிபல் சத்திரத்தில் துப்புரவுத் தொழிலாளா்களுக்காக 830 வீடுகள் விரைவில் கட்டப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும் வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், குடிசை மாற்று வாரியம் மூலம், சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் 3,400 வீடுகள் ரூ. 600 கோடியில் கட்டப்படுகிறது. இப்பணிகள் 6 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் வசிப்போா், வீடு இல்லாதவா்கள் போன்றோருக்கு இங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கவுள்ள பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

தற்போதைய நிலையில் ஆக்கிரமிப்பில் வசிப்போா், வீடு இல்லாதவா்கள் போன்ற பட்டியலில் வருவோரில் 90 சதவீதம் போ் வீடுகளில் தங்க வைக்கப்படுவதால் ஆக்கிரமிப்பில் வசிப்போா் இல்லாத நிலை ஏற்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT