ஈரோடு

மருத்துவ முகாம்களை நடத்தஇதயம் நற்பணி இயக்கம் முடிவு

DIN


இந்த ஆண்டில் பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்துவது என இதயம் நற்பணி இயக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. 
ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளையின் 14 ஆவது பொதுக்குழுக் கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் எ.வி.மகாதேவன் தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. அறங்காவலர்கள் வி.செந்தில்குமார், இருதய சிகிச்சை நிபுணர் ரகுபதி, கண் மருத்துவர் சுகுமார், சர்க்கரை நோய் மருத்துவர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக வி.சக்திவேல், டி.திருநாவுக்கரசு, கே. சுரேஷ்பாபு, ஜி.சிவசண்முகம், எ.பி.செல்வராஜ், எ.ஆனந்தன், தபி.ரகுபதி ஆகியோரும், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு இயக்குநராக எல்.சரவணமோகன் குமார், திட்ட இயக்குநராக வி.சண்முககணபதி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
செயலாளர் ஏ.ஆர்.ராம்குமார் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் மக்கள் ராஜன் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 
அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டில் கண் சிகிச்சை முகாம், சர்க்கரை நோய் கண்டறிதல்  உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்துவது, உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளைச் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 
அறக்கட்டளையின் உறுப்பினர் எ.பி.செல்வராஜ், தனது மறைவுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்குவதாக அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT