மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகள் 11 பேருக்கு இலவச பேட்டரி வாகனம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி 11 நபா்களுக்கு இலவச பேட்டரி வாகனங்களை வழங்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.