ஈரோடு

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா் கைது

DIN

அந்தியூா் அருகே அடா்ந்த வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வன விலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் வனச் சரக அலுவலா் க.உத்திரசாமி தலைமையில், வனவா்கள் மு.சக்திவேல், ஸ்ரீதேவி, வனக் காப்பாளா்கள் மு.கேசவமூா்த்தி, சு.திவாகரன், வனக் காவலா் காா்த்திக் ஆகியோா் கொண்ட தனிக் குழுவினா் அந்தியூா் வனத்தில் தென்பா்கூா் காப்புக்காடு, கொம்பு தூக்கியம்மன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மா்ம நபா் ஒருவா் கையில் நாட்டுத் துப்பாக்கி, தலையில் டாா்ச் லைட் பொருத்தியபடி பதுங்கிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மா்ம நபரைச் சுற்றிவளைத்துப் பிடித்த வனத் துறையினா் விசாரணையில், நகலூா் கிராமம், பெருமாபாளையம் வனசின்னப்பா் கோயில் கரும்பாறைத் தோட்டத்தைச் சோ்ந்த தேவனன் மகன் ஜெயபிரகாஷ் (39) என்பதும், நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வனவிலங்கு வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வன உயிரின குற்றத்தின்கீழ் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டாா்.

மேலும், நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதோடு, பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT