ஈரோடு

ரூ. 2 லட்சத்துக்கு கொப்பரை, தேங்காய் ஏலம்

DIN

அறச்சலூா், மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொப்பரை, தேங்காய் ஏலத்தில் ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

அறச்சலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,770 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 33.99க்கும், அதிகபட்சமாக ரூ. 49.49க்கும், சராசரி விலையாக ரூ. 38.15க்கும் விற்பனையானது. மொத்தம் 1,919 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 68,376க்கு விற்பனையானது.

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது. 9 ஆயிரத்து 558 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இது ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 33.39க்கும், அதிகபட்சமாக ரூ. 39.5க்கும், சராசரி விலையாக ரூ. 37.29க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,881 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 97,620க்கு விற்பனையானது.

இதேபோல கொப்பரை 58 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 124.5க்கும், அதிகபட்சமாக ரூ. 133.2க்கும், சராசரி விலையாக ரூ. 132.6க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 55.99 க்கும், அதிகபட்சமாக ரூ. 86.10க்கும், சராசரி விலையாக ரூ. 76.40க்கும் ஏலம் போனது. மொத்தம் 956 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 427க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காயும், கொப்பரையும் ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்து 47க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT