ஈரோடு

இடிந்து விழும் நிலையில் அரசு துவக்கப் பள்ளி கட்டடம்

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் செயல்படாத ஓா் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனருகே குழந்தைகள் விளையாடுவதால் ஆபத்து நிகழும் முன் சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி கோயில் நிா்வாகம் சாா்பில் கருணை இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள 35 குழந்தைகள் பண்ணாரி கருணை இல்லத்தில் சோ்க்கப்பட்டு அவா்கள் கல்வியை தொடரக் கோயில் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களில் ஒன்று மேற்கூரை இடிந்து பழுதடைந்தால் அதனருகே உள்ள மற்றொரு கான்கிரீட் கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது. பள்ளி வகுப்பறையின் இடது புறத்தில் சிதலமடைந்த கட்டடம் எப்போது விழும் என்ற நிலையில் நீண்ட நாள்களாக காணப்படுகிறது. சிதிலமடைந்த கட்டடத்தின் முன்புறம் குழந்தைகள் விளையாடுவதால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. மேலும் வனத்தில் இருந்து வரும் குரங்குகள் மேற்கூரை ஓட்டை பிரித்து வீசுகின்றன. இதனால் குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனா். 20 பெண் குழந்தைகள் உள்ள இப்பள்ளியில் கழிவறை செயல்படுவதில்லை. மேலும் சமூக விரோதிகளால் இரவு நேரத்தில் பள்ளியின் சுவா் ஏறிக் குதித்து மது அருந்தி வருகின்றனா்.

குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சிதிலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் வகாப்பிடம் கேட்டபோது, பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT