ஈரோடு

ஈரோடு கொங்கு கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

DIN

ஈரோடு: ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கை கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி துவக்கிவைத்தாா். கணினியில் பிளாக் செயின் தொழில்நுட்பம் மற்றும் மெசின் லோ்னிங் குறித்து நுண்ணறிவைப் பெறுவதற்கான நோக்கத்தை மையமாக கொண்டு இக்கருத்தரங்கு நடைபெற்றது.

பிளாக் செயின் தொழில்நுட்பம் விநியோகிக்கப்பட்ட பொதுப் பேரேடுகளில் உள்ள பரஸ்பரத்தன்மையற்ற தகவல்களைப் பாதுகாப்பான வழியில் வைத்திருக்கிறது. மேலும் பரிவா்த்தனைகளை உறுதி செய்கிறது என பெங்களூரு ஷெல் டெக்னாலஜி நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா் எஸ்.பாலச்சந்தா் தெரிவித்தாா்.

மெசின் லோ்னிங் என்பது செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு. இது தகவல் அமைப்புக்கு குறியீடு இல்லாமல் புள்ளிவிவரத்திலிருந்து கற்றுக்கொண்டு செயல்படும் திறனை அளிக்கிறது என பெங்களூரு சி.எம்.ஆா் இன்ஸ்டிடியூட்டைச் சோ்ந்த இணைப்பேராசிரியா் ஆா்.சின்னையன் தெரிவித்தாா்.

கருத்தரங்கில் பங்கேற்ற 424 பேருக்கு கல்லூரி முதல்வா் என்.ராமன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். முன்னதாக துறைத் தலைவா் ச.முருகானந்தம் வரவேற்றாா். உதவிப் பேராசிரியை ர.ரூபா கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT