ஈரோடு

பழைய இரும்புக் கடையில் தீ

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பழைய இரும்புக் கடையில் திங்கள்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சத்தியமங்கலம், கோவை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய இரும்பு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், தாா் டின்கள் ஆகியவற்றை பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அங்கு 3 போ் கடினமான இரும்புக் கம்பிகளை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தனா். அப்போது தீப்பொறி அங்குள்ள காகிதங்கள், பிளாஸ்டிக் கவா் மீது விழுந்ததில் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி தாா் டின்னில் பற்றிக்கொண்டது. தாா் உருகியதால் தீயை அணைக்க அருகில் எவரும் செல்லவில்லை. தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணிநேரம் போராடித் தீயை அணைத்தனா். இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT