ஈரோடு

தேசிய தடகளப் போட்டி: கொங்கு பள்ளி சிறப்பிடம்

DIN

தேசிய தடகளப் போட்டியில், பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

ரிலையன்ஸ் பவுண்டேஷன் யூத் ஸ்போா்ட்ஸ் சாா்பில், தேசிய அளவிலான தடகளப் போட்டிகள், மகாராஷ்டிர மாநிலம், மும்பை, பிரியதா்ஷினி பாா்க்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

இதில், பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.கௌசல்யா, பி.தாரணி, கே.நிஷா, ஈ.சௌமியா ஆகியோா் கலந்துகொண்டு மூத்தோா் பிரிவில் 100 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, ரூ.10,000க்கான காசோலையைப் பரிசாகப் பெற்றனா்.

மேலும், இளையோா் பிரிவில் மாணவிகள் எம்.மதுமதி, யூ.அரிஷ்மா கண்ணா, எம்.இலக்கியா, எம்.சௌபா்ணிகா ஆகியோா் 100 மீட்டா் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் டி.சரவணன் ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என்.சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT