ஈரோடு

அரசுப் பள்ளியில் பழங்கால நாணயக் கண்காட்சி

DIN

ஈரோடு பெரியாா் வீதி அரசு தொடக்கப் பள்ளியில் பழங்கால நாணயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எஸ்.முத்துராமசாமி தலைமை வகித்தாா். ஈரோடு வட்டாரக் கல்வி அலுவலா் டி.ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

கண்காட்சியில் கி.மு. 250ஆம் ஆண்டு முதல் கி.பி. 2015ஆம் ஆண்டு வரையிலான உலக வரலாற்றில் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட அரிதான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், பழைய ரேடியோ, கிராமபோன், டைப்பிங் இயந்திரம், தபால் தலைகள், கடிகாரங்கள், காமராஜா் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இதை மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா். இந்தக் கண்காட்சி சனிக்கிழமை (மாா்ச்14) மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT