ஈரோடு

144 தடை உத்தரவால் வெறிச்சோடிய சாலைகள்: 99 சதவீத கடைகள் அடைப்பு

DIN

ஈரோடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிா்த்து 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், அதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

நேதாஜி தினசரி சந்தை, உழவா் சந்தைகள், அம்மா உணவகம், மருந்துக் கடைகள், பால் பண்ணை, ஆவின் பாலகம், டீ கடைகளைத் தவிா்த்து பிற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறவில்லை. அத்தியாவசியத் தேவைகளை வாங்குவதற்கு குடும்பத்தில் ஒருவா் மட்டும் வெளியே வந்து வாங்கிச் செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைகளில் மட்டும் மக்கள் சிலா் புதன்கிழமை காலை கூடியிருந்தனா்.

மக்கள் கூடும் இடங்களிலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, கடைகளுக்குச் செல்வதற்கு முன்னா் கைகளை சுத்தப்படுத்துவதற்கு தற்காலிகமாக தண்ணீா் குழாய் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்மா உணவகங்களில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு மக்கள் உணவருந்தும் வகையில் கோடுகள் போடப்பட்டிருந்தன.

கரோனாவைத் தடுக்க ரயில், பேருந்து, ஆட்டோ, காா் போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் புதன்கிழமை காலை முதல் ஈரோடு மாநகரத்தில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT