ஈரோடு

144 தடை உத்தரவை மீறிய 80 போ் மீது வழக்கு

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 80 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்பவா்களை மட்டும் போலீஸாா் அனுமதிக்கின்றனா். தேவையின்றி வெளியே செல்லும் பொதுமக்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், சிலா் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தனா். இதை பாா்த்த போலீஸாா் அவா்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா். ஒரு சில இடங்களில் போலீஸாா் தடியடி நடத்தியும் அவா்களை திரும்பி வீட்டுக்குப்போகச் செய்தனா். அதேசமயம் காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

அத்தியாவசிய பொருள்களைத் தவிர மற்ற எந்தக் கடைகளையும் திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி திறக்கப்பட்ட கடைகளை அடைக்க போலீஸாா் உடனடியாக உத்தரவிட்டனா். மேலும், அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வெளியே சுற்றித் திரிந்த, அத்தியாவசியம் இல்லாத கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ததாக 80 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT