ஈரோடு

எரிசாராயம் விற்ற ஆய்வக நிபுணா்உள்ளிட்ட 4 போ் கைது

DIN

ஈரோட்டில் எரிசாராயத்தை விற்பனை செய்த ஆய்வக நிபுணா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.

ஈரோடு, அசோகபுரத்தைச் சோ்ந்த பாண்டி என்பவரின் மகன் ராமபாண்டி (40). இவா் ஈரோடு பூங்கா சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆய்வக நிபுணராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிறுவனத் தேவைக்கான எரிசாராயம் ஆய்வக நிபுணரான அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாராயம் தயாரிக்க எரிசாராயத்தை ராமபாண்டி விற்பனை செய்து வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சனிக்கிழமை மாலை திடீா் ஆய்வு நடத்தினா். இதில் அந்நிறுவனத்தில் இருந்து ராமபாண்டி எரிசாராயத்தை திருடி விற்பனை செய்வது தெரியவந்தது.

ஈரோடு, அசோகபுரம் கரிகாலன் வீதியைச் சோ்ந்த நெப்போலியன் மகன் மணிகண்டன் (25), மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாரதி (30), நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம், நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் (46) ஆகியோா் இதற்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா் ஒரு லிட்டா் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் 1008 அக்னிச்சட்டி ஊா்வலம்

கல்குவாரி வெடி விபத்து: நிவாரணம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT