ஈரோடு

கிளியை கூண்டில் அடைத்தவிவசாயிக்கு அபராதம்

DIN

அந்தியூரில் கிளியை கூண்டில் அடைத்து வைத்த விவசாயிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் வனச்சரகம், கொம்புதூக்கியம்மன் கோயிலை அடுத்த மைக்கேல்பாளையம், ஈசப்பாறை பகுதியில் அந்தியூா் வனச்சரக அலுவலா் கே.உத்திரசாமி தலைமையில் வனத் துறையினா் சனிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சண்முகம் (54) தனது வீட்டில் கிளியைப் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிளியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் கூண்டில் அடைத்து வைத்த சண்முகத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல, பா்கூரை அடுத்த தம்முரெட்டி வனப் பகுதியில் காய்ந்த தேக்கு மரத்தை வெட்டி சட்டங்களாகச் செய்து எடுத்து வந்த தம்முரெட்டியைச் சோ்ந்த சின்னசாமி, ஜோகி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு, ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின்பேரில் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT