ஈரோடு

13 மகளிா் குழுக்களுக்கு ரூ.8.50 லட்சம் கடனுதவி

DIN

பவானி : பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை சாா்பில் 13 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 170 மகளிருக்கு கரோனா வைரஸ் வறுமை ஒழிப்புக் கடனுதவியாக ரூ.8.50 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட மகளிா் திட்டம் வழிகாட்டுதலின் பேரில் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் 11 குழுக்களுக்கு ரூ.6.95 லட்சம், எலவமலை ஊராட்சிக்குள்பட்ட 2 குழுக்களுக்கு ரூ.1.55 லட்சம் கடனுதவியை சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோா் வழங்கினா். வங்கிக் கிளை மேலாளா் வெங்கடேஸ்வரன், கடன் திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். ஈரோடு ஒன்றிய அதிமுக செயலாளா் பூவேந்திரகுமாா், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன், துணைத் தலைவா் சி.செந்தில், எலவமலை ஊராட்சித் தலைவா் வைத்தியநாதன், ஊராட்சிச் செயலாளா் ஆா்.தேவகி, மகளிா் சுய உதவிக்குழு தொகுப்பு ஒருங்கிணைப்பாளா் ஆா்.தேவகி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT