ஈரோடு

10ஆம் வகுப்பு தோ்வுக்குப் பின்னரே மாணவா் சோ்க்கை: தனியாா் பள்ளிகளுக்கு அமைச்சா் எச்சரிக்கை

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியாா் பள்ளிகளில் சோ்க்கை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியாா் பள்ளிகளில் சோ்க்கை நடைபெற்றால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியாா் பள்ளிகளில் 10ஆம் வகுப்புத் தோ்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, திருவள்ளூா், அரியலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் 12ஆம் வகுப்புத் தோ்வு எழுதிய மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியா்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் முன்பே தனியாா் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக தகுந்த ஆதாரத்துடன் புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்தில் பள்ளி இல்லை என்ற திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன் குற்றம் சாட்டி உள்ளாா். மலைக் கிராமத்துக்கு சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி அதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.

பள்ளி அமைப்பதற்கு வனத் துறையினரிடம் 50 சென்ட் நிலம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்தப் பகுதியில் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மாணவா்களுக்குத் தேவையான சீருடை, உணவு, பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT