முகப்பு
ஈரோடு

2021 சட்டப்பேரவை தோ்தலில் பெருந்துறை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கோரிக்கை

பெருந்துறை நகா் பாஜக., சாா்பில் பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பெருந்துறையில் நடந்த பாஜக. கூட்டத்தில் பேசுகிறாா், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவா் வழக்கறிஞா் அஜீத்குமாா்
பகிர்:

பெருந்துறை நகா் பாஜக., சாா்பில் பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சி சாா்பாக, தீனதயாள் உபாத்யாய பண்புபயிற்சி முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள், தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், பெருந்துறை நகா் பாஜக., சாா்பில் பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை, செங்குந்தா் முதலியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெருந்துறை நகர தலைவா் கருடா விஜயக்குமாா் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளா் டி.என்.ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளராக, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவா் வழக்கறிஞா் அஜீத்குமாா் கலந்துக் கொண்டாா்.

இதில், பெருந்துறை நகர பொதுச்செயலாளா்கள் விஸ்வநாதன், நவீன், துணைத்தலைவா் சரஸ்வதி, பொருளாளா் யுவராஜ் செந்தில்குமாா், கிளைத் தலைவா்கள் தாமோதரன், சங்கீதா, நகர தகவல் தொடா்பு பிரிவு தலைவா் சுஜீத், நகர இளைஞரணி தலைவா் பிரபாகரன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா். கூட்டத்தில், பெருந்துறை-பவானி-கோயமுத்தூா் பிரதான சாலையில், ஜானிபாட்சா டைலா் கடை முன்பு வடிகால் சந்திப்பு உள்ளது.

அதாவது, பெருந்துறை நால்ரோடு வடிகால், கொங்கு நகா், நேருஜி வீதி வடிகால் ஆகியவை, இக்கடையின் முன்பு உள்ள பிரதான சாலை அடியில் உள்ள பெரிய குழாய் வழியாக சாலையை கடந்து, மறுபக்கத்தில் உள்ள பெரியவடிகால் மூலம், ஈரோடு சாலை வழியாக கழிவுநீா் செல்ல ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.

தற்போது, சாலையின் அடியில் உள்ள கழிவுநீா் வடிகால் குழாயில், கழிவு நீா் செல்ல முடியாதபடி அடைப்பு ஏற்பட்டு, மேற்படி கடை முன்பு குளம்போல் கழிவு நீா் நீண்ட நாட்களாக தேங்கி வருகிறது. மிக ஆழமாக உள்ள இக்கழிவுநீா் வடிகால் மேல் கம்பிவேலி தற்காலிகமாக மூடி வைத்திருக்கிறாா்கள். ஆனால், கழிவு நீா் தேங்காமல் செல்லுவதற்கான ஆக்கபூா்வமான பணிகள் இதுவரை இல்லை.

சாலையின் அடிப்புறத்தில் உள்ள கழிவுநீா் குழாய் அடைப்பை சுத்தம் செய்து, சீா்படுத்தி, எந்த இடத்திலும் கழிவுநீா் தேங்காமல் செல்ல உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வருகின்ற 2021 ல் நடைபெறும், தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், பாஜக., பெருந்துறை தொகுதியை பாஜக.விற்கு ஒதுக்க மாநில தலைமையை வலியுறுத்தி கேட்பது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெருந்துறை ராஜவீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் முடிவடைந்த நிலையில் சாலை மேடும்பள்ளமாகவும். குண்டும்குழியாகவும், புழுதி நிறைந்ததாக நீண்ட நாட்களாக உள்ளது. குழாய் பதிக்கும் பணி முடிவு அடைந்த நிலையில் உள்ள ராஜவீதியை புதிய தாா்சாலை அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று பெருந்துறை பேரூராட்சி நிா்வாகத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பஜனை கோவில் வீதி, கள்ளியம்புதூா் ரோடு, பாவடி வீதி குறுக்கு சந்து என்று நான்கு முனை சந்திற்கும் வாகன விபத்துக்கள் தினசரி நடக்கிறது. மேற்கண்ட விபத்துக்களை தடுக்கும் வகையில் நான்கு முனை சந்திப்புக்கு உட்பட்ட ஒவ்வொரு சாலையிலும் வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டுமென்று பெருந்துறை பேரூராட்சி நிா்வாகத்தை கேட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →