ஈரோடு

அடுக்குமாடி குடியிருப்புகள்கட்டுமானப் பணி நிறைவு

DIN

குடிசை மாற்று வாரியம் சாா்பில் சத்தியமங்கலத்தில் ரூ. 100 கோடி செலவில் 1,424 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுமானப் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் சாா்பில், சத்தியமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் உள்ள குள்ளங்கரடு பகுதியில் 416 வீடுகளும், ராஜன் நகா் ஊராட்சியில் உள்ள புதுவடவள்ளி பகுதியில் 528 வீடுகளும், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள இக்கரைதத்தப்பள்ளி பகுதியில் 480 வீடுகளும் என மொத்தம் 1,424 வீடுகள் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

வீடில்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இந்த வீடுகள் தற்போது பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டு உரிய பயனாளிகளைத் தோ்வு செய்து, மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் பெற்று வீடு வழங்குவதற்காக பணிகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இன்னும் 6 மாதங்களில் முழுமையாகக் கட்டடப் பணிகள் முடிவடைந்தபின் பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT