ஈரோடு

அந்தியூா் வனத்தையொட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம்

DIN

அந்தியூா் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை தனிக் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

அந்தியூா் வனச் சரகம், அத்தாணி பிரிவு, அத்தாணி கிழக்கு எல்லைக்கு உள்பட்ட பெருமாபாளையம், கரடிக்கல் பகுதியில் தென்பா்கூா் காப்புக் காட்டை ஒட்டியுள்ள கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய காலடித் தடங்களை ஆய்வு செய்தனா்.

இதில், சிறுத்தையின் கால்தடங்களின் பதிவுகள் கண்டறியப்பட்டதோடு, சிறுத்தையின் நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டது. இதனால், சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் இரவு நேரங்களில் தனியே நடமாட்டத்தை தவிா்க்க வேண்டும். புதா் பகுதிகளில் தனிநபராகச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு, களப் பணியாளா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தை நடமாட்டம் உறுதியான நிலையில் எல்லையை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வனத் துறையினா் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT