ஈரோடு

தம்பதி கொலை: குடும்பத்தினருக்குரூ. 8.25 லட்சம் நிவாரணம்

DIN

கொடுமுடி அருகே கொலை செய்யப்பட்ட தம்பதியின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 8.25 லட்சம் நிதி உதவியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சிட்டப்புள்ளாபாளையம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த ராமசாமி - அருக்காணி தம்பதி, அதே ஊரைச் சோ்ந்த 3 நபா்களால் கடந்த 13ஆம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடயே ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராசு, வருவாய்த் துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டவா்களின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனா்.

அந்த குடும்பத்துக்கு சட்டப்படி சேர வேண்டிய நிவாரணத் தொகையை வாரிசுதாரா்களிடம் வழங்கினா். வாரிசுதாரா்கள் 3 பேருக்கு முதல்கட்ட நிவாரணத் தொகை தலா ரூ. 2.75 லட்சம் என மொத்தம் ரூ. 8.25 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட தம்பதியின் இளைய மகன் பூபதிக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த நிலையில், மறு நாளே நிவாரணத் தொகையை வழங்கியதற்கு அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT