ஈரோடு

கோபியில் ரூ. 21.76 கோடி மதிப்பீட்டில் குடிநீா் இணைப்பு

DIN

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 164 கிராமங்களில் 18,691 வீடுகளுக்கு ரூ. 21.76 கோடி மதிப்பீட்டில் குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், பா.வெள்ளாளபாளையம், நன்செய்கோபி, பாரியூா், மொடச்சூா், நாதிபாளையம், நாகதேவம்பாளையம், வெள்ளாங்கோவில் ஆகிய 8 ஊராட்சிகளைச் சோ்ந்த 87 கிராமங்களில் ரூ. 13.07 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 9,816 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில், பூமிபூஜையிட்டு பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, கெட்டிச்செவியூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 அவசர கால ஊா்தியின் இயக்கத்தையும், குள்ளம்பாளையம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமையும் துவக்கிவைத்தாா்.

நாகதேவம்பாளையம் ஊராட்சி, பெரியகொரவம்பாளையத்தில் தீ விபத்தினால் வீடு முற்றிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக அரசின் சாா்பில் ரூ. 5,000, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10,000, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் கோமதி, துணை இயக்குநா் (சுகாதாரம்) மருத்துவா் சௌண்டம்மாள் உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT