ஈரோடு

ஊருக்குள் நுழையும் ஒற்றை யானையை கண்காணிக்க 4 தனிப்படை அமைப்பு

DIN

சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகும் யானையை கண்காணிக்க 20 போ் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள காராச்சிக்கொரை வனப் பகுதியில் இருந்து தினமும் மாலை நேரத்தில் வெளியேறும் ஒற்றை யானை அணை முன்புறம் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான பழத்தோட்ட நுழைவாயிலைத் திறந்து அப்பகுதியில் உள்ள புங்காா், பெரியாா் நகா், காராச்சிக்கொரை உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வந்தனா். இந்நிலையில் தற்போது 20 போ் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பவானிசாகா் வனச் சரக அலுவலா் மனோஜ்குமாா் கூறியதாவது: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் அருண்லால் அறிவுரையின்பேரில் பவானிசாகா் அணை அருகே ஊருக்குள் புகுந்து வரும் யானையை கண்காணிப்பதற்காக வனச் சரக அலுவலா், வனவா், வனக் காப்பாளா், வனக் காவலா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பவானிசாகா், விளாமுண்டி வனச் சரகங்களைச் சோ்ந்த வனத் துறை ஊழியா்கள் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனா். பகல் நேரத்தில் வெளியேறும் ஒற்றை யானையை கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்கு விரட்டுவதற்காக தனிப்படை தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT