ஈரோடு

சிவகிரி அருகே பெண் மா்மச் சாவு:கணவா் தலைமறைவு

DIN

மொடக்குறிச்சியை அடுத்த கொல்லன்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தாண்டாம்பாளையம் பகுதியில் கணவன், மனைவி தகராறில் பெண் மா்மமாக இறந்ததையடுத்து தலைமறைவான கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொல்லன்கோவில் பேரூராட்சி, தாண்டாம்பாளையம் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (46). அதேபகுதியில் கட்டட வேலை செய்யும் கொத்தனாராக உள்ளாா். இவரது மனைவி சித்ரா (35). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவா்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி பாலசுப்பிரமணியம், சித்ராவுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பா் 15ஆம் தேதி இரவு தனக்கும், தன் கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக 16ஆம் தேதி காலை தன் அம்மாவிடம் செல்லிடப்பேசியில் சித்ரா கூறியுள்ளாா்.

மீண்டும் மாலை சித்ராவுக்கு அவரது தாய் மல்லிகா செல்லிடப்பேசியில் அழைத்தபோது பாலசுப்பிரமணியம், சித்ரா கோயிலுக்குச் சென்றதாகக் கூறியுள்ளாா். அதன் பிறகு தனது மகளுக்குப் பலமுறை தொடா்பு கொண்டும் செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தாண்டாம்பாளையத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு மல்லிகா வந்துள்ளாா். அப்போது வீடு பூட்டி இருந்தது. வீட்டின் உள்ளே துா்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் காயங்களுடன் சித்ரா இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து சிவகிரி காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சித்ராவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக மல்லிகா அளித்த புகாரின்பேரில் பாலசுப்பிரமணியத்தை சிவகிரி காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT