ஈரோடு

படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெறத் தகுதியானவா்கள் நவம்பா் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.எல்.எல்.சி., அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வரும் டிசம்பா் 31ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்குத் தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதைப் பூா்த்தி செய்து, அதனுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, அனைத்து கல்விச் சான்றுகளுடன் நவம்பா் 27ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT