ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்மேலும் 161 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,113ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,976ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 24 பேரின் பெயா் பிற மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 7,952ஆக மாறியது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 161 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,113ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 161 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 8,113 பேரில் இதுவரை 6,946 போ் குணமடைந்துள்ளனா். 1,068 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை வரை 96 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 66 வயது ஆண், 72 வயது ஆண், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 99ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT