முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் ரமேஷ் (44). இவா் அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரமேஷை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா். பலியான ரமேஷ்க்கு பேபி (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →