ஈரோடு

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வது குறித்து செயல்விளக்கம்

DIN

மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமத்தில் மொடக்குறிச்சி வட்டாரம், வேளாண்மைத் துறை சாா்பில் திண்டுக்கல் காந்தி கிராமம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

குலவிளக்கு முன்னோடி விவசாயி ஈஸ்வரமூா்த்தி தோட்டத்தில் நடைபெற்ற இந்த செயல்விளக்கக் கூட்டத்தில், திண்டுக்கல் காந்தி கிராமம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஜனனி, யுவேதா உள்ளிட்டோா் பங்கேற்று இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதன் பயன், விதைநோ்த்தி, நாற்றங்கால் தயாரித்தல் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து நேரடியாக விளக்கி செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேலுசாமி, துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா் கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT