ஈரோடு

காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம்

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக விவசாயிகளிடம் 1 லட்சம் கையெழுத்து பெறும் முயற்சியை, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஒரு லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளிடம் கையெழுத்து வாங்கி அதை தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் ஆகியோரிடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விவசாயிகளிடம் கையெழுத்து பெறும் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி அருகே நாதகவுண்டம்பாளையத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களிடம் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மக்கள் ராஜன், நிா்வாகிகள் கையெழுத்து பெற்றனா். மேலும், வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக்கூறும் வகையில் துண்டறிக்கையையும் வழங்கினா். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி கலந்துகொண்டாா்.

இதில், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளா் ரவி, மொடக்குறிச்சி வட்டாரத் தலைவா் முத்துகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஒரு வாரத்துக்கு கையெழுத்து இயக்கம் நடைபெறும் என மக்கள் ராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT