முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஈரோட்டில் கட்டுமான பொருள்கள் வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபரின் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

ஈரோட்டில் கட்டுமான பொருள்கள் வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபரின் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு அருகே 46 புதூா் நொச்சிக்கட்டுவலசு, வள்ளி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (60). இவரது மனைவி அம்சவள்ளி. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மகள் திருமணமாகி நாமக்கல்லில் உள்ளாா். மகன் ஆந்திர மாநிலத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

பரமசிவம் கட்டுமான பொருள்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், பரமசிவம், அம்சவள்ளி இருவரும் சனிக்கிழமை இரவு வீட்டின் தரைதளத்தில் உள்ள வீட்டின் கதவை பூட்டிவிட்டு முதல் தளத்தில் உள்ள அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்துவந்து பாா்த்தபோது, தரை தளத்தில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1.07லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட ஈரோடு தாலுகா போலீஸாா், வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடியவா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →