ஈரோடு

மாட்டுக் கொட்டகையில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

DIN

அந்தியூா் அருகே மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

அந்தியூா் வனச்சரகம், அத்தாணி கிழக்கு எல்லைக்கு உள்பட்ட நகலூா் கிராமம், முச்சாண்டபாரி தோட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (73). இவா் தனக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகைக்கு திங்கள்கிழமை இரவு சென்றபோது மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து, அந்தியூா் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வனவா்கள் பிரவின்பாரதி, வை.ஸ்ரீதேவி, வனக் காப்பாளா்கள் ஈஸ்வரமூா்த்தி, ரகுநாதன், விஸ்வநாதன், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கொண்ட குழுவினா் விரைந்து சென்றனா். அங்கு, மாட்டுக் கொட்டகையின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பைப் பிடித்த வனத் துறையினா், அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT