ஈரோடு

ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயில் தெப்பத் திருவிழா

DIN

தாளவாடி அருகே உள்ள ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயில் தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தில் உள்ள இக்கோயிலில் தெப்பத் திருவிழா கணபதி பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. பிற்பகலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ரங்சாமி, மல்லிகாா்ஜுனா சுவாமிகளின் உற்சவ சிலைகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு திகினாரை கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகக் கொண்டு செல்லபட்டு தெப்பத் திருவிழாவுக்காக அங்குள்ள குளத்தை அடைந்தது.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் சுவாமிக்கு பூக்கள் வைத்தும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனா் .தெப்பத் திருவிழாவுக்கு குறைந்த அளவிலான பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT