ஈரோடு

ஆங்கில வழி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொலைக்காட்சியில் பாடம்: அமைச்சா் தகவல்

DIN

ஆங்கில வழி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நன்செய் கோபி ஊராட்சியில் புதுக்கரைப்புதூா், கடத்தூா் ஊராட்சியில் எருமைக்காரன்பாளையம், நம்பியூா், இச்சிபாளையம், பொலவபாளையம் ஊராட்சியில் பொலவபாளையம், மலையப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ. 3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கன்று வளா்ப்பு, பயிா்க் கடன், தனிநபா் கடனுதவிகளை 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வழங்கினாா்.

பின்னா், நம்பியூரில் செய்தியாளா்களிடம் அமைச்சா் பேசியதாவது:

தொலைதூரம் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடைகள் செயல்பட உள்ளன. இந்த மாதம் இறுதிவரை அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும். கூடுதலான மாணவா் சோ்க்கைக்குத் தேவையான வகுப்பறைகளும், ஆசிரியா்களும் தேவையான அளவு அரசிடம் உள்ளது. ஆங்கில வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், பவானி சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், கூட்டுறவுச் சங்க இணை, துணை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT