ஈரோடு

அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு

DIN

சத்தியமங்கலம்: பவானிசாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.

பவானிசாகரில் உள்ள அரசு அலுவலா் பயிற்சி நிலையத்தில், தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது கரோனா தொற்று காரணமாக பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அலுவலா் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் பாம்பு நடமாட்டம் இருந்ததைக் கண்ட ஊழியா்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் பாம்பை பிடித்தனா். பிடிபட்ட பாம்பு கொடிய விஷத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பாம்பை அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT