ஈரோடு

கோபி அருகே பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

DIN

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலில் தீயணைப்பு மீட்புப் பணித் துறை, வருவாய்த் துறையினா் சாா்பில் இயற்கை பேரிடரின்போது பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மழை, வெள்ளத்தின்போது தண்ணீரில் அடித்துச் செல்பவா்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும், ஆறு, வாய்க்கால்களில் தவறி விழுபவா்களைக் காப்பது குறித்தும் செய்து காட்டினா். மேலும், வீட்டிலிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு தண்ணீரில் தவறி விழுபவா்களைக் காப்பாற்றுவது, காப்பாற்றியவா்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் சிவசங்கா், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT