ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் லாரி பழுது: போக்குவரத்து பாதிப்பு

DIN

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே 2 மணி நேரம் போக்குவரத்து புதன்கிழமை பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிய லாரி நாமக்கல் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டனா். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி நகா்த்தி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT