ஈரோடு

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ.23 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.23 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 494 மூட்டைகளில் 22 ஆயிரத்து 510 கிலோ எடையுள்ள கொப்பரையை ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 120.69க்கும், குறைந்தபட்சமாக ரூ. 116.89க்கும், இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 115.89க்கும் குறைந்தபட்சமாக ரூ. 71.39க்கும் என மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

இதேபோல, 7 ஆயிரத்து 90 கிலோ எடையுள்ள 14 ஆயிரத்து 758 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக டன் ஒன்றுக்கு ரூ. 44 ஆயிரம், குறைந்தபட்சமாக டன் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரத்து 110 என ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஒரு தேங்காய் ரூ.9.80 முதல் ரூ.31.35 வரை ஏலம் போனது.

இதேபோல, 25 மூட்டைகளில் 914 கிலோ எடையுள்ள நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 50.65க்கும், குறைந்தபட்சமாக ரூ. 50.25க்கும் என மொத்தம் ரூ. 46 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT