ஈரோடு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

DIN

சித்தோடு, கோபி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி ஆகிய 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆா்டிடி பொறியியல் கல்லூரியிலும், கோபி, பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலைக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், தோ்தல் பொது பாா்வையாளா் அடோனு சாட்டா்ஜி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT